மத்திய பட்ஜெட் 2021..! கல்வித்துறைக்கு ₹99,300 கோடி ஒதுக்கீடு..! முக்கிய அறிவிப்புகள் என்ன..?

1 February 2021, 1:20 pm
Education_Budget2021_UpdateNews360
Quick Share

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாரமானால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கொரோனாவுக்கு பிந்தைய முதல் பட்ஜெட்டான இது முழுவதும் காகிதமில்லா முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2021’இன் முக்கிய அறிவிப்புகளில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கல்வித்துறையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

முக்கிய அறிவிப்பாக, புதிய தேசிய கல்வி கொள்கையின்படி, 15,000 பள்ளிகள் பலப்படுத்தப்படும் என்றும், 100 புதிய சைனிக் பள்ளிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அமைக்கப்படும் என்றும் கூறினார்.

புதிய யூனியன் பிரதேசமாக கடந்த 2019’இல் உதயமான லடாக்கைச் சேர்ந்த மாணவர்களுக்கு வசதியாக லடாக் மற்றும் லேவில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.

இது தவிர, பழங்குடியினர் மற்றும் நலிந்த மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க ஏகலைவா பள்ளிகளுக்கு ரூ 38 கோடி ஒதுக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் மலைப்பிரதேசங்களில் உள்ள பள்ளிகளின் வளர்ச்சிக்காக ரூ 48 கோடி ஒதுக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

தனது பட்ஜெட் உரையில், இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக பயிற்சி சட்டத்தை திருத்துவதற்கான அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.

கல்வித்த்துறைக்கு இந்த ஆண்டு ரூ 99,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 4.96 சதவீதம் அதிகம் ஆகும். 

Views: - 32

0

0