கர்நாடகாவில் அதிகாலை நிகழ்ந்த சோகம்..! பேருந்து தீப்பிடிக்க… 5 பேர் கருகி பலி…!

12 August 2020, 10:44 am
Quick Share

பெங்களூரு: கர்நாடகாவில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிய 5 பேர் உடல் கருகி பலியாகினர்.

சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் பகுதியில் தான் இந்த கோர சம்பவம் நடந்தது. இன்று காலை தனியார் பேருந்து ஒன்று கே.ஆர்.ஹல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதில் கிட்டத்தட்ட 32 பயணிகள் இருந்ததாக தெரிகிறது.

அப்போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட அதன் காரணமாக பேருந்தில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் 2 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியாகினர்.

தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர், கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள்  மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 3

0

0