பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 32 பேர் உயிரிழப்பு

Author: Udhayakumar Raman
13 October 2021, 10:24 pm
Quick Share

நேபாளம் நாட்டில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் நேபாள்குஞ் பகுதியில் இருந்து கம்கதி நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று முகுல் மாவட்டம் அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. நேபாள இராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து தசரா பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் இந்த பேருந்தில் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் பேருந்தில் பயணித்த பல பயணிகள் சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேபாளில் இதுபோன்று அடிக்கடி பேருந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்குக் காரணம் போதிய சாலை பராமரிப்பு இல்லாதது தான் காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Views: - 123

0

0