பிரதமர் மோடிக்கு இன்று ‘பிஸி‘ Schedule : அடுத்தடுத்து சந்திக்க காத்திருக்கும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள்!!!

Author: Udayachandran
27 July 2021, 10:57 am
Mamata PM -Updatenews360
Quick Share

5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவி ஏற்ற பின்பு, தற்பொழுது முதல் முறையாக டெல்லி சென்றுள்ளார்.

நேற்று மாநில அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும், கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மம்தா விமானம் மூலமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் மோடியை மாலை 4 மணி அளவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பாக காங்கிரஸ் மூத்த தலைவரான கமல்நாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரையும் பிற்பகல் 2 மற்றும் 3 மணியளவில் அடுத்தடுத்து சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 166

0

0