ஒரே நாடு ஒரே ஆட்தேர்வு..! அரசுப் பணிகளுக்கு பொது தகுதித் தேர்வை நடத்த புதிய அமைப்பு..! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

19 August 2020, 4:58 pm
job_fair_final_updatenews360
Quick Share

சி.இ.டி. எனும் அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பிற்கான பொது தகுதித் தேர்வை நடத்துவதற்காக என்.ஆர்.ஏ. எனும் தேசிய ஆட்சேர்ப்பு முகமை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசில் உள்ள அனைத்து கெஜட் அந்தஸ்து அல்லாத பதவிகளுக்கும், பொதுத்துறை வங்கிகளில் உள்ள பதவிகளுக்கும் ஆட்சேர்ப்பு செய்வதற்காக சி.இ.டி நடத்தப்படுகிறது.

இந்த ஒப்புதல் மூலம், அரசுத் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள், இனிமேல் நாடு முழுவதும் ஒற்றை, ஆன்லைன் சிஇடி தேர்வு எழுத வேண்டும். இந்த சி.இ.டி மதிப்பெண் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். 

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த முடிவை வரவேற்று தனது ட்வீட்டில், “பல்வேறு அரசு காலியிடங்களுக்கு முதற்கட்ட தேர்வுக்கு பொதுவான தகுதி சோதனை (சிஇடி) நடத்துவதற்கு தேசிய ஆட்சேர்ப்பு முகமை (என்ஆர்ஏ) அமைப்பதற்கான அமைச்சரவை முடிவு தொலைநோக்கு பார்வையுடன் கொண்டுவரப்பட்ட ஒரு புரட்சிகர சீர்திருத்தமாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 கோடி தேர்வர்கள் வெவ்வேறு ஆட்சேர்ப்பு முகமை நடத்திய தேர்வில் சுமார் 1.25 லட்சம் அரசு வேலைகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். என்.ஆர்.ஏ அறிமுகம் அரசாங்க ஆட்சேர்ப்புக்காக தங்கள் நேரம், முயற்சி, போக்குவரத்து செலவு ஆகியவற்றை வீணடிக்கும் வேட்பாளர்களின் செலவுகள், சிரமங்கள் மற்றும் நேரத்தை குறைக்கும்.

சி.இ.டி தேர்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு தேர்வருக்கும் அவர்களின் மதிப்பெண்ணை மேம்படுத்த இரண்டு கூடுதல் வாய்ப்புகள் இருக்கும், மேலும் சிறந்த ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு சிறந்த மதிப்பெண்கள் பரிசீலிக்கப்படும்.

மேலும் மாநில அரசு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு, இதை பயன்படுத்திக்கொள்ள விரும்பினால் சி.இ.டி தகுதி பட்டியல் என்.ஆர்.ஏ மூலம் செலவு பகிர்வு அடிப்படையில் மாநிலத்திற்கு கிடைக்கவும் வழிவகை செய்யப்படும்.

Views: - 26

0

0