இனி இந்தியாவில் இருந்து கனடா செல்ல ‘NO’ தடை: நேரடி விமான சேவைக்கு மீண்டும் அனுமதி..!!

Author: Aarthi Sivakumar
26 September 2021, 5:45 pm
Quick Share

ஒட்டாவா: இந்தியாவில் இருந்து நாளை முதல் நேரடி விமான சேவைக்கு அனுமதி அளித்து கனடா அரசு அறிவித்துள்ளது.

கொரோனா 2வது அலை காரணமாக இந்தியாவில் இருந்து நேரடியாக விமானங்களை இயக்க கடந்த ஏப்ரல் மாதம் கனடா தடை விதித்தது. தொற்று பரவல் குறையாத நிலையில் இந்த தடை பல முறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், கனடா போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் இந்தியாவில் இருந்து நேரடியாக வரும் விமானங்கள் கனடாவில் தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது.

கனடாவிற்கு விமானம் புறப்படுவதற்கு 18 மணி நேரத்திற்கு முன்னர் டெல்லி விமான நிலையத்தில் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில் எடுக்கப்பட்ட கொரோனா மாலிகுலர் சோதனை சான்றிதழை பயணிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கனடாவின் இந்த அறிவிப்பினை வரவேற்று கனடாவிற்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா கூறியுள்ளதாவது, இரு நாடுகளுக்கு இடையிலான விமான சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கை இதுவாகும்.

ஏர் இந்தியா மற்றும் ஏர் கனடா நிறுவனங்கள், இனிமேல் தினசரி டெல்லி – டொரான்டோ மற்றும் வான்கூவர் இடையே விமானங்களை இயக்க முடியும். பயண கட்டுப்பாடுகளை இன்னும் எளிதாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Views: - 307

0

0