அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க முடியாது..! விவசாய சங்கத் தலைவர் நரேஷ் டிக்கைட் உறுதி..!
31 January 2021, 3:35 pmவிவசாயத் தலைவர் நரேஷ் டிக்கைட், எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் பிரதமரின் கௌரவத்தை மதிப்பார்கள் என்றும், ஆனால் தங்களின் சுயமரியாதையையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளனர் என்று நரேந்திர மோடி தனது அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு போதும் என்று கூறிய ஒருநாள் கழித்து கூறினார்.
“அரசாங்கம் எங்கள் ஆட்களை விடுவித்து பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும்” என்று டிக்கைட் கூறினார்.
“மரியாதைக்குரிய தீர்வை எட்ட வேண்டும். ஆனால் நாங்கள் ஒருபோதும் அழுத்தத்திற்கு பணிய மாட்டோம்.” என டெல்லிக்கும் உத்தரபிரதேசத்திற்கும் இடையிலான காசிப்பூர் எல்லையில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
முன்னதாக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய, பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தும் சலுகை இன்னும் உள்ளது என்றும், குடியரசு தினத்தன்று டெல்லியின் சில பகுதிகளில் வன்முறை வெடித்த சில நாட்களுக்குப் பின்னர், பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் ஒரு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டால் மட்டும் போதும் என்றும் கூறினார்.
“நாங்கள் பிரதமரின் கௌரவத்தை மதிக்கிறோம். அரசாங்கமோ, பாராளுமன்றமோ தங்களுக்கு தலைவணங்குவதை விவசாயிகள் விரும்பவில்லை.” என்று டிக்கைட் கூறினார்.
அதே நேரத்தில் விவசாயிகளின் சுய மரியாதை பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யும் வகையில், இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
0
0
1 thought on “அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க முடியாது..! விவசாய சங்கத் தலைவர் நரேஷ் டிக்கைட் உறுதி..!”
Comments are closed.