இயல்பு நிலைக்கு திரும்பிய தலைநகரம் : டெல்லியில் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், சந்தைகள் திறப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2021, 10:41 am
Delhi Gym Open- Updatenews360
Quick Share

டெல்லி : கொரோனா பரவல் குறைந்ததையடுத்து டெல்லியில் சந்தைகள், மால்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பலர் பாதிக்கப்ப்டடனர். குறிப்பாக இந்தியாவில் டெல்லியில் அதிக பாதிப்புகளை சந்தித்து வந்தது. பின்னர் மெல்ல மெல்ல கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது.

கொரோனா அதிகரித்த போது ஊரடங்கு தடை விதிக்கப்பட்ட பல்வேறு தடைகள் போடப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உணவகங்களிலும் கடைகளிலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டனர்.

Mandatory masks, Aarogya Setu app as parks open partially to the Delhi  public | Cities News,The Indian Express

கிட்டதட்ட ஓராண்டுக்கும் மேலாக நீடித்த கொரோனா கால ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியிருந்த மக்கள் இது ஒரு புதிய விடுதலையாகவே அமைந்துள்ளது. மேலும் பொது இடங்களில் மக்கள் கூடுவது, மூன்றாம் அலைக்கு வித்திட வாய்ப்புள்ளதாக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில், டெல்லி லட்சுமி நகர் மார்க்கெட் பகுதியில் சில கடைகள் கொரோனா கால விதிமுறைகளை மீறியதால் மீண்டும் மூடப்பட்டுள்ளன. சந்தைகள், மால்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டதால் டெல்லி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

Views: - 385

0

0