கார் – மோட்டார் சைக்கிள் மோதி பயங்கர விபத்து : 3 பேர் விபத்தில் சிக்கி பலி

15 January 2021, 4:47 pm
Quick Share

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள சிட்டியாலா நகரில் நடைபெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணம் செய்த 3 பேர் மரணம் அடைந்தனர்.

சிட்டியாலாவில் உள்ள சாலை சந்திப்பில் மூன்று இளைஞர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் மோட்டார் சைக்கிள், வேகமாக பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாலிபர்கள் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி 3 பேரும் நலகொண்டா அரசு மருத்துவமனையில் மரணமடைந்தனர். விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள சிட்டியாலா போலீஸார் விபத்துக்கு காரணமான கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 0

0

0