ஊழல் குற்றச்சாட்டுகளில் சிபிஐ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு..! கருப்பு ஆடுகளை களையெடுக்க அதிரடியில் இறங்கிய சிபிஐ..!

14 January 2021, 3:50 pm
CBI_UpdateNews360
Quick Share

வங்கி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனங்களுக்கு ஆதரவாக பதவியை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் ஊழல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிபிஐ தனது பல அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மோடி அரசு பதவியேற்ற பிறகு, மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக வங்கியில் நடக்கும் பல்வேறு கடன் மோசடிகள் வெளியில் வந்த வண்ணம் உள்ளன.

இது தொடர்பான விவகாரங்களில், வங்கிகளின் கூட்டமைப்புகள் அளிக்கும் புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்வது வழக்கமாக நடக்கும் ஒன்றாகும்.

இந்நிலையில், வங்கி மோசடி தொடர்பான புகார்களில், மோசடியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஆதரவாக, சிபிஐ விசாரணை அதிகாரிகள், தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதும், மேலும் ஊழலில் ஈடுபடுவதும் சிபிஐ தலைமையின் கவனத்திற்கு வந்துள்ளது.

இது சிபிஐ அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் விவகாரமாக இருந்தாலும், துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுக்கும் விதமாக, தனது சொந்த அதிகாரிகள் மீது விசாரணையை மேற்கொண்டது.

இதையடுத்து, இன்று காலை குற்றச்சாட்டுக்கு உள்ளான பல்வேறு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தேடல் நடவடிக்கை குறைந்தது நாட்டின் ஐந்து பகுதிகளில் நடந்துள்ளதாக நம்பப்படுகிறது என அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சமீபத்தில் சென்னையில் சிபிஐ விசாரணையில் கைப்பற்றப்பட்ட 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் வெளியான நிலையில், சிபிஐக்குள் இருக்கும் கருப்பு ஆடுகளை களையெடுக்க சிபிஐ முனைந்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Views: - 12

0

0