அமைச்சராக இருந்த காலத்தில் 44% உயர்ந்த சொத்து மதிப்பு..! கர்நாடக காங்கிரஸ் தலைவருக்கு தலைவலி கொடுக்கும் சிபிஐ..!

Author: Sekar
6 October 2020, 7:31 pm
dk_shivakumar_updatenews360
Quick Share

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கு சொந்தமான மூன்று மாநிலங்களில் பரவியுள்ள 14 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது.

சிவகுமாருக்கு எதிராக வழக்குத் தொடர செப்டம்பர் 25, 2019 அன்று அனுமதி வழங்கப்பட்டாலும், காங்கிரஸ் தலைவருக்கு எதிரான எஃப்.ஐ.ஆர் இந்த ஆண்டு அக்டோபர் 3’ஆம் தேதி தான் முறையாக பதிவு செய்யப்பட்டது.

01.04.2013 முதல் 30.04.2018 வரையிலான காலகட்டத்தில் டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சார்புடைய குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குத் தெரிந்த வருமான ஆதாரங்களுக்கு ஏற்றவாறு சொத்துக்களை குவித்துள்ளதாக கூறும் ஆரம்ப விசாரணையின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. கர்நாடகாவில் அமைச்சராக டி.கே.சிவகுமார் செயல்பட்டு வந்தபோது இது நடந்துள்ளது.

“டி.கே.சிவகுமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிவகுமார் அமைச்சராவதற்கு முன்பு, ரூ 33,92,62,793 என்ற அளவில் அசையும் மற்றும் அசையாத சொத்துக்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, 01.04.2013 நிலவரப்படி, இந்த விவரங்கள் ஸ்ரீ டி.கே.சிவக்குமாரின் 13.04.2013 தேதியிட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் படி கிடைக்கின்றன. 

சிவகுமாரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் ரூ 48,60,81,700 மதிப்பில் அசையும் மற்றும் அசையாத சொத்துக்களை வாங்கியுள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த அனைத்து சொத்துக்களின் மொத்த மதிப்பு அதாவது 30.04.2018 தேதியின்படி ரூ 162,53,44,494 ஆகும்.

அவர்களின் மொத்த செலவு ரூ 113,12,16,585 ஆக இருப்பதால் நிகர சொத்து மதிப்பு ரூ 74,93,40,069 ஆக உள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட காலத்தில் அவர்களின் மொத்த வருமானத்தில் 44.93% உயர்ந்துள்ளது. மேலும் இந்த திடீர் வளர்ச்சிக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களால் திருப்திகரமாக எந்த விளக்கமும் கொடுக்க முடியவில்லை.” என  எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் டி.கே.சிவகுமார் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, தன்னுடைய சொத்து உயர்வில் மறைக்க எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

Views: - 43

0

0