சாரதா சிட்ஃபண்ட் மோசடி வழக்கு..! திரிணாமுல் கட்சித் தலைவரை வறுத்தெடுத்த சிபிஐ..!

27 August 2020, 1:44 pm
saradha_scam_updatenews360
Quick Share

மேற்கு வங்கத்தை உலுக்கிய சாரதா சிட்ஃபண்ட் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டகுணால் கோஷ், அதிகாரப்பூர்வமாக திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் சேர்க்கப்பட்டு ஒரு மாதம் கழித்து, தற்போது சிபிஐயால் விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று சிபிஐ முன் ஆஜரான நிலையில், சிபிஐயால் பலமணி நேரம் வறுத்தெடுக்கப்பட்டார்.

குணால் கோஷ் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 2014’இல் திரிணாமுல் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜியை சாரதா மோசடியில் பிகப்பெரிய பயனாளி எனவும் மம்தாவை கோழை எனவும் குறிப்பிட்டதால் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். கடந்த 2019’ஆம் ஆண்டில், சாரதா மோசடி விசாரணையில் ஷில்லாங்கில் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருடன் இணைத்து இவரிடமும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குணால் கோஷ் மீண்டும் திரிணாமுல் கட்சியில் சேர்க்கப்பட்டு, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க திரிணாமுல் சார்பாக நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளராக தோன்றிய பின்னர் சிபிஐ புதிய சம்மன் அனுப்பியுள்ளது. இருப்பினும், சிபிஐ அலுவலக சம்மன் குறித்து குணால் கோஷிடம் கேட்டபோது, அவர் கொல்கத்தாவிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலையில் உள்ளதால், அதற்காகவே சிபிஐ அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.

சுவாரஸ்யமாக, இதற்கிடையில் புதுடெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகம் கொல்கத்தாவில் உள்ள அதன் பொருளாதார குற்ற பிரிவு 4 கிளையில் நான்கு எஸ்பி தரவரிசை அதிகாரிகளை நியமித்துள்ளது. மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியுடன் குறிப்பிடத்தக்க அரசியல் தொடர்புகளைக் கொண்ட சாரதா, நாரதா, ரோஸ்வாலி, ஐகோர், பிரயாக் மற்றும் இன்னும் சில சிட் ஃபண்ட் மோசடிகளை சிபிஐயின் இந்த குறிப்பிட்ட துறை விசாரித்து வருவதால் இது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்கு வங்கத் தேர்தல்களுக்கு முன்னதாக, சிபிஐ சிட் ஃபண்ட் மோசடி விசாரணையை விரைவுபடுத்துகிறது. மேலும் இது கொரோனா பாதிப்பின் காரணமாக குறைந்தது மூன்று முதல் நான்கு மாதங்கள் தாமதமாகிவிட்ட சூழ்நிலையில், இதற்கு மேல் எந்த தாமதத்திற்கும் இடமளிக்காமல் விசாரணையை விரைந்து முடிக்க சிபிஐ தீவிரமாக உள்ளது என கூறப்படுகிறது.

Views: - 0

0

0