மம்தாவின் குடும்பத்தில் கைவைத்த சிபிஐ..! அபிஷேக் பானர்ஜியின் மனைவியிடம் நிலக்கரி ஊழல் வழக்கில் விசாரணை..!

23 February 2021, 1:10 pm
CBI_UpdateNews360
Quick Share

நிலக்கரி முறைகேடு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் அண்ணன் மகனான எம்.பி அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிராவிடம் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இன்று விசாரணை நடத்தியது.

மேற்கு வங்காளத்தில் பல கோடி நிலக்கரி ஊழல் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. அதில் அனுப் மஜி எனும் லாலா மற்றும் பினாய் மிஸ்ரா ஆகிய இரு முக்கிய சதிகாரர்கள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.

இருவரும் தலைமறைவாக உள்ளனர். மேலும் சிபிஐ இருவரையும் தேடப்படும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. சிபிஐ அவர்கள் இருவருக்கு எதிராகவும் ஒரு எச்சரிக்காகி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

இன்று முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது அண்ணன் மகன் மற்றும் திரிணாமுல் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அபிஷேக் பானர்ஜியின் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்தார். அபிஷேக்கின் வீட்டில் சுமார் பத்து நிமிடங்கள் மம்தா பானர்ஜி இருந்தார்.

நிலக்கரி கடத்தல் மோசடியில் சிபிஐ சம்மன் அனுப்பியதற்கு ருஜிரா பானர்ஜி பதிலளித்ததோடு, இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனது குழுவுடன் விசாரணையில் இணைவதாக சிபிஐயிடம் கேட்டுக் கொண்டார். சிபிஐ ஞாயிற்றுக்கிழமை விசாரணையில் சேருமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேற்குவங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவர உள்ள சூழலில், மக்கள் மத்தியில் ஏற்கனவே அவப்பெயருடன் உள்ள மம்தா பானர்ஜி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாக, நிலக்கரி ஊழல் வழக்கில், அவரது குடும்பத்திலும் சிபிஐ கை வைத்துள்ளது, திரிணாமுல் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0

Leave a Reply