சிபிடி-2 தேர்வில் முறைகேடு… ரயிலை கொளுத்திய போராட்டக்காரர்கள்… அதிர்ச்சி வீடியோ காட்சிகளால் பரபரப்பு

Author: Babu Lakshmanan
26 January 2022, 4:05 pm
Quick Share

பீகார் : சிபிடி -2 தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயிலை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பீகாரில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட சிபிடி-2 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், எனவே, தேர்வை ரத்து செய்யக்கோரி கயாவில் தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அங்கிருந்த ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதனால், ரயில் பெட்டியில் தீ மளமளவென எரிந்தது. அதில் இருந்து வெளியேறிய கரும்புகை காட்சிகள் பதைபதைக்க வைத்தது.

இதையடுத்து, நிகழ்விடத்திற்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ரயிலுக்கு தீவைத்த சிலரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அரசு பொருள்களை சேதப்படுத்தக் கூடாது என மாணவர்களை கேட்டுக் கொள்வதாக காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா குமார் தெரிவித்தார்.

Views: - 441

0

0