பிரபல பாலிவுட் பக்தி பாடகர் நரேந்திர சஞ்சல் மறைவு: பிரபலங்கள் இரங்கல்..!!

23 January 2021, 9:42 am
narendhar sanjal - updatenews360
Quick Share

மும்பை: பிரபல பாலிவுட் பக்தி பாடகர் நரேந்திர சஞ்சல் மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரப பாலிவுட் பக்தி பாடகரான நரேந்திர சஞ்சல் (வயது 80)காலமானார். பாலிவுட் படங்களான பாபி, பெனாம் மற்றும் ரோட்டி கப்தாவுர் மக்கான் போன்ற படங்களில் அவர் பாடி உள்ளார். திரைப்படங்கள் மற்றும் நவராத்திரி விழாக்களில் சஞ்சல் பாடிய பக்தி பாடல்கள் பக்தர்களிடையே பிரபலமானவை.

உடல் நல பாதிப்பு காரணமாக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமிதாப் பச்சன் நடித்து ஆர்.டி.பர்மன் இசையமைத்த 1974 ஆம் ஆண்டு வெளியான ‘பெனாம்’ திரைப்படத்தின் டைட்டில் பாடலை பாடி பிரபலமானார். அதே ஆண்டில், ‘ரோட்டி கப்தாவுர் மக்கான்’ படத்திற்காக ‘மெஹங்கை மார் கயி’ பாடலையும் பாடி உள்ளார்.

ரிஷி கபூர் மற்றும் டிம்பிள் கபாடியா நடித்த 1973 ஆம் ஆண்டு ராஜ் கபூரின் சூப்பர்ஹிட் ‘பாபி’ படத்தில் ‘பெஷக் மந்திர் மஸ்ஜித் டோடோ’ பாடலையும் அவர் பாடி உள்ளார். 1980 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ‘ஆஷா’ படத்திற்காக முகமது ரபியுடன் ‘து நே முஜே புலயா’ பாடலை பாடி உள்ளார். நரேஷ் சஞ்சல் மறைவுக்கு பிரதமர் மோடி, லதா மங்கேஷ்கர் , தலர் மெகந்தி,ஹர்பஜன்சிங் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Views: - 15

0

0