பிரபல நடிகர் விரைவில் கைது? திருமணமாகி 2 வருடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

18 May 2021, 6:07 pm
Actor Arrest - Updatenews360
Quick Share

பிரபல நடிகரின் கொடுமையை தாங்க முடியாத மனைவி தூக்குமாட்டி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளவர் உன்னி தேவ். இவருக்கு பிரியங்கா என்பவருக்கும் கடந்த 2019ஆம் வருடம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

Death of actor Unni Rajan P Dev's wife Priyanka: Family alleges mystery! -  Malayalam News - IndiaGlitz.com

எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த இவர்களுக்கு ஆரம்ப முதலே பிரச்சனை ஏற்பட்டது. தகராறு முற்றிய நேரத்தில் எல்லாம் மனைவியை நடிகர் உன்னி தேவ் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

Relatives allege mystery in death of actor Unni Rajan P Dev's wife |  Priyanka Suicide case| Rajan P Dev's daughter in law commits suicide

கணவன் செய்யும் கொடுமையை தாங்க முடியாத பிரியங்கா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொச்சி போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தார். ஆனால் புகார் அளித்த மறுநாளே பிரியங்கா அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

பிரியங்காவின் மரணம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்காவின் பெற்றோர்கள், மகளின் மரணத்திற்கு உன்னிதேவ்வே காரணம் என கூறியுள்ளனர்,. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Views: - 204

0

1