மாயமான பிரபல நடிகை சாக்கு மூட்டையில் சடலமாக கண்டெடுப்பு : திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி!!
Author: Udayachandran RadhaKrishnan19 January 2022, 11:42 am
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பிரபல நடிகை சாக்கு மூட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு கடந்த 1998 முதல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
சில நாட்களுக்கு ரைமா காணாமல் போனதாக அவரது உறிவனர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் ஜனவரி 17ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை போலீசார் மீட்டனர்.
பின்னர் சடத்தை பிரேத பரிசோதனைக்காக டாக்காவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அதில் இறந்தது நடிகை ரைமா என்பது உறுதி செய்யப்பட்டது.
மாயமான ரைமாவை பணத்திற்காக கடத்தி கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரைமா கொலை செய்யப்பட்ட சம்பவம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0