கங்கனாவுக்கு பத்மஸ்ரீ… பிவி சிந்துவுக்கு பத்ம விபூசன்… ஜனாதிபதி கையில் விருது பெற்ற 119 பிரபலங்கள்..!!

Author: Babu Lakshmanan
8 November 2021, 1:16 pm
padma awards - updatenews360
Quick Share

சென்னை : 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

குடியரசு தலைவர் மாளிகையில் 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும், 10 பேருக்கு பத்ம பூசன் விருதுகளும், 7 பேருக்கு பத்ம விபூசன் விருதுகளும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 119 பேருக்கு ஜனாதிபதி வழங்கினார். மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்பட 7 பேருக்கு பத்ம விபூசன் விருதுகள் வழங்கப்பட்டது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஹாக்கி வீராங்கனை ராணி உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 520

0

0