திருநங்கைகளுக்கும் இனி அரசுப் பணி : மத்திய அரசின் அட்டகாசமான மூவ்.. குவியும் பாராட்டு..!!

Author: Babu Lakshmanan
25 September 2021, 2:07 pm
transgender - central government - updatenews360
Quick Share

இடஒதுக்கீட்டில் திருநங்கைகளும் பயனடையும் விதமாக, அவர்களை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்யி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிசி பிரிவினருக்கான பட்டியலில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை சமூக நீதித்துறை, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன், நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அது நிறைவேற்றப்படும். பிறகு, அது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சட்டமாக்கப்படும்.

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை சம அந்தஸ்தில் வைத்து மதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் திருநங்கைகளுக்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பு கிடைக்கும். எனவே, மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Views: - 142

0

0