திமுக எம்.பி. சிவா ‘ட்விட்‘ : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!!
7 September 2020, 4:08 pmபிராந்திய மொழிகள் உபயோகிப்பது தடுத்து நிறுத்த வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பிராந்திய மொழிகள் அகற்றப்படுவதை கடுமையாக கண்டிக்கின்றோம் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவா ட்விட் செய்திருந்தார். மேலும் உடனடியாக நிலைமையை மீட்டெடுக்க வேண்டி வலியுறுத்தினார்.
இந்த நிலையில் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பிராந்திய மொழிகள் உபயோகிக்கப்படுத்தக் கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார்.
மத்திய அரசின் நிதி அமைச்சகத்தில் இருந்து வங்கிகளில் அல்லது ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.
பிராந்திய மொழிகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறோம், பிராந்திய மொழிகளை உபயோக படுத்தக்கூடாது என்று எண்ணம் இருந்ததில்லை, அப்படி எங்கேனும் இடையூறு ஏற்பட்டால் தெரிவிக்கவும், உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவிட்டுள்ளார்.
0
0