விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் : மருத்துவமனை நிர்வாகம் தகவல்

15 January 2021, 8:25 am
shripad naik 1- udatenews360
Quick Share

டெல்லி : கார் விபத்தில் சிக்கியி மத்திய அமைச்சர் ஸ்ரீபாதநாயக்கின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீபாதநாயக், மத்திய அமைச்சரவையில் ராணுவ இணை அமைச்சராகவும், தனிப்பொறுப்புடன் ஆயுஷ் துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். இவர், கடந்த திங்கட்கிழமை, தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டு தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கார் கோரமான விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் அவரது மனைவியும், உதவியாளரும் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இவர், பலத்த காயங்களுடன் கோவாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஸ்ரீபாதநாயக் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது இரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

Views: - 3

0

0