கங்கையில் சடலங்கள் மிதக்கவிடப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்..! உ.பி. மற்றும் பீகாருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!

16 May 2021, 8:25 pm
Ganga_Dead_Bodies_UpdateNews360
Quick Share

கங்கை மற்றும் அதன் துணை நதிகளில் இறந்த சடலங்கள் மிதக்கவிடப்படுவதைத் தடுக்குமாறு உத்தரபிரதேசம் மற்றும் பீகாரை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் ஆறுகளில் கொட்டப்படுவது விரும்பத்தகாதது மற்றும் ஆபத்தானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சடலங்களின் பாதுகாப்பான அகற்றல் மற்றும் கண்ணியமான தகனம் குறித்து மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆறுகளில் சடலங்கள் மிதப்பது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கங்கையில் இறந்த உடல்களைக் கொட்டுவதைத் தடுக்கவும், அவை பாதுகாப்பாக அகற்றப்படுவதில் கவனம் செலுத்துவதற்கும், கண்ணியமான தகனத்தை உறுதி செய்வதற்கான ஆதரவை வழங்குவதற்கும் நமாமி கங்கை மாநிலங்களுக்கு அறிவுறுத்துகிறது என்று ஜல் சக்தி அமைச்சகம் மே 15-16 அன்று நடத்தப்பட்ட மறுஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறைகளுடன் கலந்தாலோசித்து நீரின் தரத்தை அடிக்கடி கண்காணிக்க மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 231

0

0