இனி இந்தியர்கள் அனைவரும் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கலாம்..! மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு..!

27 October 2020, 2:29 pm
kashmir_dal_lake_updatenews360
Quick Share

ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் இனி இந்தியர்கள் அனைவரும் நிலம் வாங்குவதற்கு வழி வகுத்து, நிலச் சட்டங்களை மத்திய அரசு திருத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மூன்றாம் ஆணை, 2020 என்று அழைக்கப்படும் புதிய உத்தரவை என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளது.

ஆர்ட்டிகிள் 370’வது பிரிவை ரத்து செய்ததன் மூலம், முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு மாற்றியமைத்துள்ளதுடன், ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் ஒருங்கிணைக்க பல்வேறு சட்டத்திருத்தங்களை கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2020 செப்டம்பரில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் 2020 குடிமக்கள் சான்றிதழ் (நடைமுறை) விதிகளை திருத்தியது.

Views: - 31

0

0