“கிருஷ்ண ஜன்மபூமி விவகாரத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை”..! அமித் ஷா ஓபன் டாக்..!

18 October 2020, 1:08 pm
Amit_Shah_updateNews360 (2)
Quick Share

கிருஷ்ண ஜன்மபூமிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஷாஹி எட்கா மசூதியை அகற்றக் கோரி மதுரா நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதில் மத்திய அரசுக்கோ பாஜகவுக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சில அமைப்புகள் தாங்களாகவே நீதிமன்றத்தை அணுகியதாகவும், அரசாங்கத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஷா கூறினார்.

ஒரு செய்தி ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அமித் ஷா, “நீதிமன்றத்தில் அல்லது வேறு எங்கும் நாங்கள் வழக்கில் இணைக்கப்படவில்லை. எனவே, இது குறித்து நான் கருத்து தெரிவிப்பது பொருத்தமானதல்ல.” எனத் தெரிவித்தார்.

பகவான் கிருஷ்ணா கோயில் வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு மசூதியை அகற்றக் கோரிய ஒரு வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ததை மதுரா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டதை அடுத்து அமித் ஷா அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

17’ஆம் நூற்றாண்டு முகலாய பேரரசர் ஒளரங்கசீப்பின் உத்தரவின் பேரில் புனித இந்து சன்னதியின் ஒரு பகுதி தரைமட்டமாக்கப்பட்டு, பின்னர் கட்டப்பட்ட ஷாஹி எட்கா மசூதியை அகற்றக் கோரி செப்டம்பர் 26 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ராம் ஜன்மபூமியும் இயக்கமும் பாஜகவின் நிகழ்ச்சி நிரலாக இருந்தபோதும், மதுரா பிரச்சினையில் பாஜக சம்பந்தப்படவில்லை என்று ஷா மேலும் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், காஷி விஸ்வநாத் கோயில்-கயன்வாபி மசூதி மற்றும் கிருஷ்ணா ஜன்மபூமி ஆகிய நீண்டகால நிலுவையில் உள்ள மோதல்களை பாஜக தீர்க்கத் தயாராக உள்ளது என்று பாஜக தலைவர் வினய் கட்டியார் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இந்த விஷயங்களில் முடிவுகள் புனிதர்களால் எடுக்கப்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். மசூதிகள் கட்டப்பட்ட காஷி மற்றும் மதுராவில் உள்ள அனைத்து மத தளங்களையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பல்வேறு இந்துத்துவ அமைப்புகள் நீண்ட காலமாக கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply