சக்கா ஜாம் போராட்டத்தை அறிவித்துள்ள விவசாயிகள்..! டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்..!

6 February 2021, 11:32 am
Delhi_metro_UpdateNews360
Quick Share

விவசாயிகள் இன்று நடத்த உள்ள சக்கா ஜாம் எனும் நெடுஞ்சாலை முடக்க போராட்டத்தை அடுத்து டெல்லியின் பல மெட்ரோ நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடுவதாக டெல்லி மெட்ரோ ரயில் கழகம் இன்று அறிவித்தது. 

டெல்லி மெட்ரோ ரயில் கலகம் முக்கியமாக வடக்கு மற்றும் மத்திய டெல்லியில் உள்ள மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடியுள்ளது. 

முன்னதாக, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரு மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், இன்று நாடு முழுவதும் மூன்று மணி நேர சக்கா ஜாம் (சாலைத் தடை) செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.

புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் படி மண்டி ஹவுஸ், ஐ.டி.ஓ, டெல்லி கேட், விஸ்வவித்யாலயா, லால் குயிலா, ஜமா மசூதி, ஜன்பத் மற்றும் மத்திய செயலகத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டன.

இதற்கிடையே, டெல்லியில் சட்டம் ஒழுங்கு நிலைமையை பராமரிக்க டெல்லி-என்.சி.ஆர் பிராந்தியத்தில் டெல்லி காவல்துறை, துணை ராணுவம் மற்றும் ரிசர்வ் படைகளைச் சேர்ந்த சுமார் 50,000 வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Views: - 21

0

0

1 thought on “சக்கா ஜாம் போராட்டத்தை அறிவித்துள்ள விவசாயிகள்..! டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்..!

Comments are closed.