தந்தையின் நண்பருடன் கள்ளக்காதல்… உல்லாசத்தால் கம்பி எண்ணும் 18 வயது இளம்பெண் : அதிர வைத்த கொடூர கொலை!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2023, 3:58 pm
Kozhikode Murder -Updatenews360
Quick Share

கேரளாவில் ஓட்டல் அதிபரை கடத்திச்சென்று கொன்று அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வனப்பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் அதிர்ச்சியை தந்தன. விசாரணையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் நகரில் வசித்து வந்தவர் சித்திக் (வயது 58). இவருக்கு சொந்தமான ஓட்டல் கோழிக்கோடு எலத்திபாலம் அருகே உள்ளது.

அந்த ஓட்டலில் ஊழியர்களாக பாலக்காடு செற்புழச்சேரி நகரை சேர்ந்த சிபில் (19), பர்ஹானா (18), ஆஷிக் (23) வேலை பார்த்தனர்.

ஓட்டல் அதிபர் சித்திக் கொலை வழக்கில் இந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்ட மூவரும், சித்திக்கிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பறிக்க சதி செய்து அவரை ஹனி டிராப்பில் சிக்க வைத்தது விசாரணையில் தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்ட சிபில், பர்ஹானா, ஆஷிக் ஆகிய மூவரும் எம்.டி.எம்.ஏ என்ற கொடிய போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சித்திக் மற்றும் பர்ஹானா திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தனர். பர்ஹானின் தந்தையும் கொல்லப்பட்ட சித்திக் இருவரும் நண்பர்கள்.

இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக பணிபுரிந்து உள்ளனர். அதனால் சித்திக்குடன் பர்ஹானாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் போனில் பேசுவது வழக்கம்.

அது பின்னர் கள்ளத்தொடர்பாக மாறி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐந்து லட்ச ரூபாயை கேட்டு சித்திக்கை மிரட்டியுள்ளனர்.

ஆனால் அந்த பணத்தை கொடுக்க சித்திக் தயாராக இருந்தார். இருப்பினும், அன்றிரவு பர்ஹானா தன்னுடன் ஒரு இரவைக் கழிக்க வேண்டும் என்று சித்திக் நிபந்தனை விதித்து உள்ளார்.

தான் ஹனிட்ராப்பில் விழுந்ததை உணர்ந்த சித்திக் தனது கோரிக்கையில் உறுதியாக இருந்துள்ளார். இதையடுத்து, சிபிலுக்கும், ஆஷிக்கும் சித்திக்குடன் வாக்குவாதம் ஏற்பட்டு, கடைசியில் கொலையில் முடிந்தது.

அவரது காதலரான ஷிபிலியின் ஆலோசனையின் பேரில் பர்ஹானா சித்திக் உடன் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கம்தான் சித்திக்கை மிரட்டி பணம் பறிக்க தூண்டி உள்ளது. அதன் பின் வாக்குவாதம் ஏற்பட்டு, கடைசியில் கொலையில் முடிந்தது.

Views: - 311

1

1