சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல்..! மூன்று வீரர்கள் வீரமரணம்..!

Author: Sekar
23 March 2021, 7:06 pm
dgp_chhattisgarh_updatenews360
Quick Share

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயன்பூர் மாவட்டத்தில் இன்று நக்சல்களால் மேற்கொள்ளப்பட்ட ஐ.இ.டி குண்டுவெடிப்பில் மூன்று மாவட்ட ரிசர்வ் காவலர் (டி.ஆர்.ஜி) ஜவான்கள் மற்றும் ஒரு காவல்துறை ஊழியர் உயிர் இழந்துள்ளனர்.

மேலும் 15 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பஸ்தர் பிராந்திய ஐ.ஜி. பி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் நாராயன்பூரில் கடேனார் மற்றும் கன்ஹர்கான் இடையே 27 டி.ஆர்.ஜி பணியாளர்களைக் கொண்ட பஸ் சென்றபோது, ஐ.இ.டி தாக்குதலுக்கு உள்ளானது என்று ஐ.டி.பி.பி. தெரிவித்துள்ளது.

45 வது பட்டாலியன் ஐடிபிபி பணியாளர்கள் காயமடைந்தவர்களை வெளியேற்றி வருகின்றனர். முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு தேடல் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டும் மார்ச் 22, 2020 அன்று பஸ்தாரில் ஒரு கொடூரமான நக்சல் தாக்குதல் நடந்தது. இதில்எஸ்.டி.எஃப் பிரிவைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் மற்றும் டி.ஆர்.ஜி.யின் 12 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நேற்று, ஐந்து நக்சல்கள் பீஜப்பூர் மாவட்டத்தின் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் 2015’இல் நான்கு போலீஸ்காரர்களைக் கடத்தி பின்னர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதற்கு பதிலடியாக நக்சலைட்டுகள் இந்த தாக்குதலை மேற்கொண்டார்களா எனும் கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Views: - 111

0

0