பிராமணர்கள் குறித்து அவதூறு கருத்து : சத்தீஸ்கர் முதலமைச்சரின் தந்தை கைது!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2021, 6:23 pm
chhattisgarh CM Father - Updatenews360
Quick Share

பிராமணர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை நந்த குமார் பாகேல் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் அவர்கள் உள்ளார். இந்நிலையில் பூபேஷ் பாகேலின் தந்தை நந்தகுமார் பாகேல் உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு அண்மையில் சென்று இருந்தார்.

அப்போது இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள மக்களுக்கும் நான் கூறுவது, உங்கள் கிராமத்துக்குள் பிராமணர்களை மட்டும் அனுமதிக்காதீர்கள். மற்ற அனைத்து சமூகத்தினரிடமும் நான் பேசுவேன். ஆனால் பிராமணர்களை புறக்கணிக்க வேண்டும், அவர்களை வோல்கா ஆற்றின் கரைக்கு அனுப்புவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

இவரது இந்த பேச்சுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் சத்தீஸ்கர் முதல்வரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் தந்தை மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதற்காக அவர் செய்யும் குற்றத்தை எல்லாம் முதல்வராக என்னால் மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சத்தீஸ்கர் மாநில முதல்வரின் தந்தை நந்தகுமார் பாகேல் பேசியது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், இன்று நந்தகுமார் பாகேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ராய்ப்பூரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Views: - 199

0

0