ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி..!!

20 October 2020, 8:50 am
cm jegan mohan - updatenews360
Quick Share

ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று சேத பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 10ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மத்திய வங்கக் கடலின் மேற்கு பகுதியில் மையம் கொண்டது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது தீவிரமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.

இதனால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், பிரகாசம் அணையில் இருந்து உபரி நீர்வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, கரையோர தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

Views: - 35

0

0