உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்! தேவஸ்தான குழுவினர் தகவல்!!

6 February 2021, 12:43 pm
Tirupati In Ulundhurpet - Updatenews360
Quick Share

ஆந்திரா : உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவில் கட்ட இடம் வழங்கிய தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு கோவில் கட்டுவதற்கு பணமும் வசூலித்து வழங்கினார்.

உளுந்தூர் பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆன தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு 4 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் அங்கு கோவில் கட்ட அவர் இதுவரை பொது மக்கள் பங்களிப்பாக வசூல் செய்த 3 கோடியே 16 லட்சம் ரூபாயை இரண்டு தவணைகளாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Views: - 0

0

0