விமானத்தில் பயணித்த சுட்டிக்குழந்தை : தந்தையே விமானியாக வந்ததால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 October 2021, 6:53 pm
Father and Daughter Flight -Updatenews360
Quick Share

விமானத்தில் பயணம் செய்த போது பைலட்டாக இருந்த தந்தையை கண்டு சிறுமி மெகிழ்ச்சியடைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி செல்வதற்காக தனது தாயுடன் காத்திருந்த சிறுமி சனயா விமானத்தில் ஏறி அமர்ந்தார். கையில் டிக்கெட்டுடன் இருக்கையில் அமர்ந்த சிறுமி விமானத்தை சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது விமானத்தில் பைலட்டு உடையுடன் இருந்த தனது தந்தையை பார்த்த சிறுமி மெய்மறந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனது மழலை குரலால் அப்பா என அழைத்து மகிழ்ச்சி பொங்கினார். இந்த காட்சியை சிறுமியின் தாய் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் தந்தைக்கு ஹாய் சொன்ன க்யூட்டான வீடியோ இணையத்தை வட்டமடித்து வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் , தந்தை மகளின் பாசத்தை பறைசாற்றி வருகின்றனர்.

Views: - 153

0

0