இந்தியாவில் ஒரு கிராமத்தையே கட்டி முடித்துள்ள சீனா: செயற்கைக்கோள் படத்தில் காத்திருந்த அதிர்ச்சி…!!

19 January 2021, 8:00 am
indo china - updatenews360
Quick Share

அருணாச்சல பிரதேசத்தில் 100க்கும் மேற்ப்பட்ட வீடுகளுடன் சீனா ஒரு கிராமத்தை கட்டி முடித்துள்ளது செயற்கைக்கோள் படத்தில் தெளிவாக தெரியவந்துள்ளது.

இந்தியா – சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஆண்டு லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இரு பக்கமும் உயிரிழப்பு ஏற்பட்டது. அதன்பின் பல கட்டங்களாக பல தரப்பினருக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்றாலும், சீனா பின்வாங்குவதில் தயக்கம் காட்டி வருகிறது.

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையிலும் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி சூ ஆற்றங்கரையோரத்தில் சீனா 101 வீடுகளை கொண்ட ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்துள்ளது. இந்திய பகுதியுடன் கூடிய சுமார் 4.5 கி.மீட்டரில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் இந்தியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த இடத்தில் வீடுகள் கட்டுவதற்கான எந்த செயல்பாடும் தென்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாத செயற்கைகோள் படத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்திய எல்லையில் சீனா கட்டுமான வேலைகளை செய்து வருவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக சீனா அதை செய்து வருகிறது.

Views: - 1

0

0