நீண்ட காலம் நீடிக்கும் லடாக் எல்லை மோதல்..? மத்திய பாதுகாப்பு அமைச்சக ஆவணத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!

6 August 2020, 12:21 pm
Indian_Army_UpdateNews360
Quick Share

எல்லையில் சீனப்படைகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதாகவும், தற்போதைய எல்லை மோதல் நீண்ட காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சக ஆவணம் குறிப்பிட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் பாதுகாப்புத் துறையின் முக்கிய நடவடிக்கைகளை பட்டியலிடும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில், பாகாப்பு அமைச்சகம் சீன இராணுவம் மே மாதம் 17-18 தேதிகளில் குக்ராங் நாலா, கோக்ரா மற்றும் பாங்காங் த்சோவின் வடக்குக் கரையோரப் பகுதிகளில் அத்து மீறி இந்தியப் பகுதிக்குள் நுழைந்தது. இது ஆகஸ்ட் 4 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இதன் விளைவாக, நிலைமையைத் தணிக்க இரு தரப்பு ஆயுதப் படைகளுக்கிடையில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கார்ப்ஸ் கமாண்டர் நிலை கொடி கூட்டம் ஜூன் 6 அன்று நடைபெற்றது. இருப்பினும், ஜூன் 15’ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு வன்முறை சம்பவம் நடந்தது. இதன் விளைவாக இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டது.” என்று அது கூறியது.

ஜூன் மாத செயல்பாடுகளை மட்டுமே குறிக்கும் இந்த ஆவணம், படைகளை பின்வாங்கும் நடைமுறை குறித்து விவாதிக்க ஜூன் 22 அன்று இராணுவ பேச்சுவார்த்தைகள் நடந்தன என மேலும் தெரிவித்துள்ளது. 

சீனாவின் ஒருதலைப்பட்ச ஆக்கிரமிப்பால் எழும் கிழக்கு லடாக்கின் நிலைமை முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் வளர்ந்து வரும் சூழ்நிலையின் அடிப்படையில் நெருக்கமான கண்காணிப்பு மற்றும் உடனடி நடவடிக்கை தேவை என ஆவணம் எச்சரித்துள்ளது.

பாங்காங் த்சோவிற்கு அருகிலுள்ள பிங்கர் பகுதியில் இரு படைகளுக்கும் இடையிலான கடுமையான வேறுபாடுகள் மற்றும் சீன ராணுவம் வெளியேறத் தயங்குவதால், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இழுபறியிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது.

சீன ராணுவம் பின்வாங்கத் தயங்குவது மற்றும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள சீனப் படைகள் போன்வற்றால், சீனாவுடனான இந்த எல்லை மோதல் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

Views: - 11

0

0