அண்ணி எனது அன்னை.. சிரஞ்சீவி மனைவி கொடுத்த பரிசு : ஆனந்த கண்ணீரில் துணை முதல்வர் பவன் கல்யாண்.. (வீடியோ)!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2024, 7:43 pm
Pawan
Quick Share

ஆந்திராவில் நடந்த தேர்தலில் ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 சட்டப்பேரவை 2 மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றதுடன் தெலுங்கு தேச கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றி சந்திரபாபு முதல்வராக பதவியேற்றுள்ளார்.

சந்திராபாபு ஆட்சியை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்த பவன் கல்யாணுக்கு சந்திரபாபுவும் முக்கியத்துவம் அளித்து பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவியுடன் இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கினார்.

மேலும் அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் படத்துடன் துணை முதல்வர் படத்தை வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் துணை முதல்வராக பதவியேற்க உள்ள பவன் கல்யாணுக்கு அவரது அண்ணி சுரேகா அரசு கோப்பில் கையெழுத்திட பேனாவை பவன் கல்யாணுக்கு வழங்கினார்.

பவன் கல்யாண் குர்தா பாக்கெட்டில் வைத்தார். பவன் கல்யாணும் மகிழ்ச்சியுடன் தன் தாயிக்கு ஈடான அண்ணியை கட்டி அனைத்து அதனை ஏற்று கொண்டார்.

இதில் நடிகரும் அண்ணனுமான சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் மனைவியும் அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த வீடியோவை சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணியின் அன்பு பரிசு என பதிவு செய்துள்ளார்.

Views: - 253

0

0