யுனிவர்சல் பாஸ் கெய்ல் உடன் உடல் வலிமையை காட்டிய சாஹல்! வைரல் புகைப்படம்

2 May 2021, 3:40 pm
Quick Share

வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி வீரரும் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் கிறிஸ் கெய்ல் உடன், பெங்களூரு அணி வீரர் யுவேந்திய சாஹல் தனது ஒல்லியான உடலுடன் சட்டையை கழற்றி போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் லீக் ஆட்டம் ஒன்றில், பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. கேப்டர் கே.எல் ராகுல் 91 ரன்கள் குவித்தார். பின் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 145 ரன்கள் மட்டும் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டி முடிந்த பின், இரு அணி வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது கட்டுமஸ்தாக இருக்கும் கிறிஸ் கெயில், தனது டிஷர்ட்டை கழற்றி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அப்போது உடன் இருந்த ஆர்சிபி வீரர் சஹாலும், தனது சட்டையை கழற்றி, அவருடன் இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். கெயில் அருகில் நிற்கும் போது, ஒல்லியாக இருக்கும் சஹால், மலை முன் நிற்கும் மடு போல இருக்கிறார்.
https://twitter.com/PunjabKingsIPL/status/1388200655576342534

இந்தப் புகைப்படத்தை பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலாகி உள்ளது. நெட்டிசன்கள் பலரும் புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர். முன்னதாக, பெங்களூரு அணியில் கிறிஸ் கெயில் விளையாடிய போது, சக வீரராக இருந்த சஹால், டிரஸ்சிங் ரூமில், டிஷர்ட் இல்லாமல் புகைப்படம் எடுத்தது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 60

0

0

Leave a Reply