ஒரு வருடம் கழித்து ஆப்கானிஸ்தானில் திறக்கப்படும் திரையரங்குகள் : கொண்டாட முடியாமல் தவிக்கும் பெண்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2022, 7:05 pm
Afghan Theater open - Updatenews360
Quick Share

ஆப்கனில், ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி ஓராண்டை கடந்துள்ளது. அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

தேவையில்லாமல் பெண்கள் வெளியே வருவதற்கு தடை விதித்தவர்கள், பெண்கள் வெளியே வந்தால் உடலை முழுவதும் மூடியபடி வர வேண்டும் என்றனர். பெண்கள் மேல்நிலை கல்வி கற்பதற்கு தடை விதித்தது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கல்விக்காக வெளிநாடு செல்லவும் தடை விதித்துள்ளனர். பெண்கள் நலத்துறை அமைச்சகத்தையும் மாற்றிவிட்டனர்.

இந்நிலையில், ஒராண்டாக மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி கொடுத்துள்ளனர். அதற்கு பலர் மகிழ்ச்சி தெரிவித்தாலும், அதில் பெண்களின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

37 படங்கள் மற்றும் ஆவணபடங்கள் திரையிட தயாராக இருந்தாலும், அதில் அதிபா முகமதி என்ற ஒரே பெண் மட்டுமே அனைத்து படங்களிலும் நடித்துள்ளார்.

Views: - 1581

0

0