CAB Protest: டெல்லியை ‘பற்றிய’ வடகிழக்கு போராட்டம்..! விளைவு… 4 பேருந்துகள் பஸ்பம்..! பதற்றம்..!

15 December 2019, 8:42 pm
Quick Share

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் மையம் கொண்டிருந்த குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டம் தலைநகர் டெல்லியிலும் பரவியது. வன்முறையில் 4 பேருந்துகள் தீக்கிரையாகின.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணிக்குள்ளே கருத்து முரண்கள் வெளி வர ஆரம்பித்துள்ளன.

யாரும் கணிக்கமுடியாத வகையில் வடகிழக்கு மாநிலங்கள் இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்க, அசாம், திரிபுரா மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.

வன்முறை, கலவரம், துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு உத்தரவு என இரு மாநிலங்களும் பதற்றத்தின் உச்சத்தில் இருக்கின்றன. அந்த போராட்டங்கள் இப்போது தலைநகர் டெல்லியை மையம் கொண்டிருக்கிறது.

டெல்லியின் தெற்கு பகுதியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தின் போது எதிர்பாராத விதமாக வன்முறை வெடித்தது.

போராட்டக்காரர்களை போலிசார் அப்புறப்படுத்த தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளையும் பயன்படுத்தினர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த 4 பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.

இதில் அந்த 3 பேருந்துகளும் முற்றிலும் தீக்கிரையாகின. ஆனால் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று மாணவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடந்த சம்பவம் பற்றி மாணவர் அமைப்பை சேர்ந்த சைமன் பரூக்கி கூறியிருப்பதாவது: மதுரா சாலையில் உட்கார்ந்து மாணவர்கள் அமைதியான வழியில் தான் போராடினர்.

ஆனால், அங்கு வந்த போலிசார் மாணவர்கள் சிலரை கைது செய்ய முனைந்தனர். அதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் வன்முறை மூண்டது என்றார்.