“ஸ்வப்னா சுரேஷை பலமுறை சந்தித்தது உண்மை தான், ஆனால்..”..! மழுப்பும் கேரள முதல்வர் பினராயி விஜயன்..!

Author: Sekar
14 October 2020, 12:38 pm
Swapna_Suresh_Pinarayi_Vijayan_UpdateNews360
Quick Share

அமலாக்க இயக்குநரக விசாரணையில் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சருக்கு தன்னை நன்றாக தெரியும் எனக் கூறியிருந்த நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் முதல் முறையாக தான் ஐக்கிய அரபு எமிரேட் தூதரக அதிகாரிகளை சந்தித்ததையும், அப்போதைய தூதரகத்தின் செயலாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ் பெரும்பாலான கூட்டங்களில் கலந்து கொண்டார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார். 

எனினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் தொடர்பு கொள்ளும் முதல் புள்ளியாக எம்.சிவ்ஷங்கரை முறைசாரா முறையில் நியமித்ததாக, அமலாக்க இயக்குநரகத்திற்கு ஸ்வப்னா அளித்த வாக்குமூலங்களை முதலமைச்சர் உறுதிப்படுத்தவில்லை.

எனினும், முதல்வர் அதை மறுக்கவில்லை. அவர் அதைப் பற்றி நினைவில் இல்லை என்று மட்டுமே கூறினார்.

“எனது அலுவலகத்தில் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று என்னிடம் கேட்கப்பட்டிருந்தால், எம்.சிவசங்கரைத் தான் கூறியிருப்பேன்.  இது ஒரு அசாதாரணமான விஷயமாக இருந்திருக்காது. அது இயல்பானது.” என்று முதல்வர் பினராயி விஜயன் தனது வழக்கமான மாலை பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஊடகங்களிடம் கூறினார்.

“ஐக்கிய அரபு எமிரேட் தூதரகம் முதல்வரைப் பார்க்க ஏதாவது தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. நிகழ்வுகளுக்கு என்னை அழைக்க அவர் வருகை தருகிறார். அது வழக்கமான நடைமுறைகளின் ஒரு பகுதியாகும்.” என்று முதல்வர் கூறினார்.

இதற்கிடையில், தங்கக் கடத்தல் வழக்கில் பிரதான குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுக்கு அமலாக்க இயக்குநரகம் பதிவு செய்த பணப் பத்திர வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

எனினும், ஸ்வப்னா சுரேஷ் தேசிய புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்ட பயங்கரவாத இணைப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால் அவர் தொடர்ந்து சிறையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 43

0

0