‘அயன்’ பட பாணியில் வயிற்றில் வைத்து கோக்கைன் கடத்தல் : ரூ.12 கோடி மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல்.. ஒருவர் சிக்கினார்..!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2022, 1:30 pm
cocaine Ayan - Updatenews360
Quick Share

அயன் சினிமா பட பாணியில் வயிற்றில் கோக்கைன் வைத்து கடத்திய ஆப்பிரிக்காவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து ரூபாய் 12 கோடி மதிப்புள்ள 1157 கிராம் எடைகொண்ட கோகைன் பறிமுதல் செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சம்சாபாத் விமான நிலையத்தில் கடந்த 21 ஆம் தேதி வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் (Directorate of Revenue Intelligence) சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது கிழக்கு ஆப்பிரிக்கா டான்சானியாவை சேர்ந்த சாலே (வயது 41) என்ற பயணி சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்ததை கண்ட அதிகாரிகள் அவரிடம் சோதனை மேற்கொண்டனர்.

இதில் அந்த பயணி வயிற்றில் மாத்திரை வடிவில் கொக்கைன் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றிலிருந்த 22 கொக்கைன் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

அதில் ஒரு கொக்கைன் மாத்திரை ஏற்கனவே உடைந்து கசிவு ஏற்பட்டதன் காரணமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அறிந்த அதிகாரிகள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இரு நாட்கள் இடைவெளியில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து 57 மாத்திரைகள் என வயிற்றில் கடத்திவரப்பட்ட ரூபாய் 12 கோடி மதிப்புள்ள 1157 கிராம் எடை கொண்ட 79 கொக்கைன் மாத்திரைகளை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து யாருக்கு வழங்க இந்த கொக்கைன் மாத்திரைகள் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 726

0

0