கஞ்சாவுடன் கையும் களவுமாக சிக்கிய பிரபல ஹிந்தி காமெடி நடிகை..! கைது செய்த என்சிபி..!

21 November 2020, 8:41 pm
BHARTI_SINGH_Updatenews360
Quick Share

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) இன்று பிற்பகல், தொலைக்காட்சி நகைச்சுவை நடிகை பாரதி சிங்கை, தடைசெய்த போதைப்பொருளான கஞ்சா வைத்திருந்ததாகவும், உட்கொண்டதாகவும் குற்றம் சாட்டி கைது செய்துள்ளது. மேலும் அவரிடமிருந்து போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நாங்கள் பாரதி சிங்கை கைது செய்துள்ளோம். அவரிடமிருந்து 86 கிராம் கஞ்சாவைக் கண்டுபிடித்தோம். அவரது கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியா தற்போது என்சிபியால் விசாரிக்கப்படுகிறார்.” என்று என்சிபி மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தெரிவித்தார்.

வணிக ரீதியான அளவு எனக் கூறப்படும் சுமார் 86.50 கிராம் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சா சோதனையின் போது அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. மேலும் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட இரண்டு போதைப்பொருள் விற்பனையாளர்கள் பாரதி மற்றும் ஹர்ஷின் பெயர்களை வெளிப்படுத்தியதை அடுத்து, என்.சி.பி. இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது

முன்னதாக கஞ்சா கைப்பற்றப்பட்டதை அடுத்து என்சிபி அலுவலகத்தில் நடந்த ஐந்து மணிநேர விசாரணையின் பின்னர், இன்று மாலை பாரதி சிங் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் அவருடைய கணவரிடம் இன்னும் விசாரணை நடந்து வருகிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையில், போதைப்பொருள் விவகாரம் சிக்கிய நிலையில், என்சிபியின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 0 View

0

0

1 thought on “கஞ்சாவுடன் கையும் களவுமாக சிக்கிய பிரபல ஹிந்தி காமெடி நடிகை..! கைது செய்த என்சிபி..!

Comments are closed.