வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஆறுதல் : ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2023, 11:52 am
RBI - Updatenews360
Quick Share

ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து புதிய நிதி ஆண்டு தொடங்கியுள்ளது. ரிசர்வ் வங்கியை பொறுத்தவரை ரெப்போ ரேட் ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒருமுறையும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதிய நிதி கொள்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார். அதன்படி, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

ரெப்போ ரேட் 6.5 சதவீதமாகவே தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இது வங்கிகளில் வீட்டுகடன், வாகன கடன் போன்றவற்றை வாங்கியுள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக இது உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 6.5 சதவீதமாகவே தொடர்கிறது. இது அடுத்த மூன்று மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிக்கப்பட்டு உள்ளது.

Views: - 368

0

0