சொந்த கட்சி பெண்ணை பலாத்காரம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கைது ; கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
29 June 2021, 12:40 pm
CPM rape -- - updatenews360
Quick Share

கேரளா : மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினரை அதே கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு அருகே வடகரா பகுதியைச் சேர்ந்த 2 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருடைய கட்சியைச் சேர்ந்த சக நிர்வாகி பாபுராஜ் என்பவர், அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இங்கு நடந்தவற்றை உன் கணவரிடம் சொல்லி விடுவேன் என மிரட்டி, அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

பாபுராஜ் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் இச்சையை தீர்த்து வருவதையறிந்த அவரது நண்பரும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ள மற்றொரு நிர்வாகியுமான லிஜிஸ் என்பவரும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

சக கட்சி பெண்ணை சொந்த கட்சி நிர்வாகிகள் பலாத்காரம் செய்து வந்தது மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக்கு தெரிய வந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணிடம் பேசி சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட சக கட்சி நிர்வாகிகள் மீது போலீஸில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 365

0

0