இரக்கம் மற்றும் அர்ப்பணிப்பை நினைவுபடுத்தும் நாள்..! அனுமன் ஜெயந்திக்கு மோடி வாழ்த்து..!

27 April 2021, 12:37 pm
Modi_UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அனுமனின் ஆசீர்வாதத்தை நாடினார். 

அனுமன் ஜெயந்தி தினமான இன்று அனுமன் வாழ்த்துக்களைத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “அனுமன் ஜெயந்தியின் புனித இந்நாள், கடவுள் அனுமனின் இரக்கத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவுபடுத்தும் நாள். கொரோனாவிற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தில் அவருடைய ஆசீர்வாதங்கள் எப்போதும் நம்மீது இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலையின் கோரப்பிடியில் இந்தியா உள்ளது. நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு புதிய தொற்றுநோய்களில் முன்னோடியில்லாத வகையிலான எழுச்சியால் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. 

இந்தியா உலகளாவிய ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. உலகின் தினசரி பாதிப்புகளில் இந்தியா மட்டுமே கிட்டத்தட்ட 35 சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும், 34,595 பேர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இதில் 17,333 பேர் கடந்த ஏழு நாட்களில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நேற்று மட்டும் இந்தியாவில் புதிதாக 3.23 லட்சம் புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தினசரி எண்ணிக்கை தொடர்ச்சியாக ஏழாவது நாளாக மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2,700’க்கும் மேற்பட்டோர் தொற்றுநோயால் உயிரிழந்துள்ளனர்.

Views: - 167

0

0