தரிசனத்துக்காக வரிசையில் நின்ற போது தகராறு : ஆந்திர – தமிழக பக்தர்கள் இடையே மோதல்… ஒருவருக்கு மூக்குடைப்பு.. திருப்பதியில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2022, 5:44 pm
Andhra TN Devotees Clash - Updatenews360
Quick Share

திருப்பதி : ஏழுமலையான தரிசிக்க வரிசையில் நின்ற பக்தர்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக இரு பிரிவினர் தாக்கிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசன வரிசையில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழக பக்தர் மற்றும் ஆந்திர பக்தர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த அனந்தபுரம் மாவட்டம் உறவகொண்டா பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்ற பக்தருக்கு மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. இதனால் வரிசையில் நின்றுகொண்டிருந்த சக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேவஸ்தான ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபட்ட பக்தர்கள் அனைவரையும் தரிசன வரிசையில் இருந்து வெளியேற்றினர். காயமடைந்த பக்தரை மீட்டு சிகிச்சைக்காக திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 552

0

0