“வாழ்த்துக்கள் இந்தியா”..! மகன் கைதைத் தொடர்ந்து சுஷாந்த் வழக்கில் மௌனத்தைக் கலைத்த ரியாவின் தந்தை..!

6 September 2020, 9:57 am
indrajit_updatenews360
Quick Share

நடிகர் ரியா சக்ரவர்த்தியின் தந்தையான ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கலோனல் இந்திரஜித் சக்ரவர்த்தி, தனது மகன் ஷோயிக் சக்ரவர்த்தியின் கைதைத் தொடர்ந்து, முதல் முறையாக தனது மௌனத்தைக் கலைத்து, ஒரு நடுத்தரக் குடும்பம் சிதைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.  

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்பாக ஷோயிக் சக்ரவர்த்தியை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) வெள்ளிக்கிழமை கைது செய்தது.

ராஜ்புத்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டாவுடன் செப்டம்பர் 9’ஆம் தேதி வரை அவர் என்சிபியின் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஷோயிக் மற்றும் மிராண்டா இருவரும் ராஜ்புத்தின் மரண வழக்கில் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

கஞ்சாவை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், விற்பனை செய்தல், கொள்முதல் செய்தல் மற்றும் சட்டவிரோத போக்குவரத்திற்கு நிதியளித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் என்.சி.பி. வழக்கு பதிவு செய்துள்ளதாக அதன் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்நிலையில் முதல்முறையாக மனம் திறந்த இந்திரஜித் சக்ரவர்த்தி, “வாழ்த்துக்கள் இந்தியா. நீங்கள் என் மகனை கைது செய்துள்ளீர்கள். என் மகள் அடுத்த வரிசையில் இருப்பதை நான் நம்புகிறேன். நீங்கள் ஒரு நடுத்தர குடும்பத்தை திறம்பட இடித்துவிட்டீர்கள். ஆஃப்கோர்ஸ், நீதிக்காக எல்லாம் நியாயமானது. ஜெய் ஹிந்த்.” என அவர் தனது 24 வயது மகனை கைது செய்ததை கண்டித்து ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக இந்திரஜித் சக்ரவர்த்தியையும் சிபிஐ பல நாட்கள் விசாரித்து வருகிறது.

Views: - 8

0

0