பாஜகவின் கோட்டையை தகர்த்த காங்கிரஸ் ; திடீர் திருப்பத்தால் புது நெருக்கடி… அதிர்ச்சியில் உறைந்த பாஜக தலைமை..!!

Author: Babu Lakshmanan
2 March 2023, 4:40 pm
Bjp Congress - Updatenews360
Quick Share

28 ஆண்டுகள் பாஜக வசம் இருந்த கசாபா தொகுதியை, நடந்து முடிந்த மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் சிவசேனா – காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றிய அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கசாபா சட்டப்பேரவை தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருந்த முக்தா திலக் திடீரென திடீரென உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. சிவசேனா கட்சியை ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றியபின் கொந்தளிப்பான சூழலில், கடந்த 26ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவின் வசம் 28 ஆண்டுகளாக இருந்த கசாபா தொகுதியை, மீண்டும் பாஜக தன்வசப்படுத்தும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளையில், கசாபா தொகுதியை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பினர் கடுமையாக பிரச்சாரம் செய்தது.

அதன் பிரதிபலனாகவே கசாபா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ரவிந்திர தாங்கேகர் வெற்றி பெற்று அதிர்ச்சி கொடுத்தார். ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, தான் கைவசம் வைத்திருந்த கசாபா தொகுதியை இடைத் தேர்தலில் இழந்தது அந்தக் கட்சிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. நவநிர்மான் சேனா கட்சியில் இருந்த ரவிந்திர தாங்கேகர் கடந்த 2017ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 359

0

0