நேதாஜியைக் கொன்றது காங்கிரஸ் தான்..! பாஜக எம்பி பகீர் புகார்..!
24 January 2021, 12:24 pmநேதாஜி சுபாஸ் சந்திரபோஸை காங்கிரஸ் தான் கொலை செய்ததாக பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் குற்றம் சாட்டினார்.
உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு பொது பேரணியில் உரையாற்றிய உன்னாவோவைச் சேர்ந்த பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ், “எனது குற்றச்சாட்டு என்னவென்றால், காங்கிரஸ் சுபாஸ் சந்திரபோஸைக் கொன்றது. மகாத்மா காந்தியோ அல்லது பண்டிட் நேருவோ அவரது புகழ் முன் நிற்க முடியாது.” என்றார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை நாடு கொண்டாடும் வேளையில், பாஜக தலைவரிடமிருந்து இந்த அறிக்கை வந்துள்ளது .
ஜனவரி 23, 1897 அன்று ஒடிசாவின் கட்டாக்கில் ஜானகிநாத் போஸின் மகனாகப் பிறந்த நேதாஜி, இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். முதல் முறையாக பிரிட்டனுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த சிறப்புக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 18, 1945 அன்று தைபேயில் நடந்த விமான விபத்தில் போஸ் மரணமடைந்ததாகக் கூறப்படுவது சர்ச்சையாகவே உள்ள நிலையில், இந்த சம்பவத்தில் அவர் இறந்துவிட்டார் என்பதை மத்திய அரசு 2017’இல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலின் மூலம் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் தற்போது, பாஜக எம்பி ஒருவர், காங்கிரஸ் தான் திட்டமிட்டு நேதாஜியைக் கொன்றது எனக் கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.
0
0