காங்கிரஸ் தலைவர் நசீமுதீன் கிரிமினல் வழக்கில் கைது..! ஜாமீன் கோரி ஆஜரானபோது நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

20 January 2021, 12:36 pm
congress_nasimuddin_siddiqui_updatenews360
Quick Share

கிரிமினல் வழக்கில் ஜாமீன் கோரி எம்.பி / எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானபோது காங்கிரஸ் தலைவர் நசீமுதீன் சித்திகி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ராம் அச்சல் ராஜ்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

பாஜக தலைவர் தயாஷங்கர் சிங்கின் மைனர் மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், தற்போது காங்கிரசில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளருமான நசீமுதீன் சித்திகி மற்றும் ராம் அச்சல் ராஜ்பர் தலைமறைவானதை அடுத்து அவர்களின் சொத்துக்களை முடக்க சிறப்பு நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது.

இந்நிலையில் இரு தலைவர்களின் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததனர். இந்த வழக்கிற்காக அவர்கள் இருவரும் ஆஜரான நிலையில், ஜாமீன் மனுவை நிராகரித்து, அவர்கள் இருவரையும் சிறையிலடைக்குமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இருவருக்கும் எதிரான வழக்கை 2016 ஜூலை 22 அன்று ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் தயாஷங்கர் சிங்கின் தாய் டெட்ரா தேவி தாக்கல் செய்திருந்தார்.

மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது குடும்பத்தினரை துஷ்பிரயோகம் செய்ததாக டெட்ரா தேவி குற்றம் சாட்டியிருந்தார். அதே நேரத்தில் சித்திகி, ராஜ்பர் மற்றும் பலர் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் ஹஸ்ரத்கஞ்சில் உள்ள அம்பேத்கர் சிலையின் முன்பு, அவரது சிறுவயது பேத்தி உட்பட அவரது குடும்பத்திற்கு எதிராக இதேபோன்ற துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து டெட்ரா தேவி அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

தயாஷங்கர் சிங் பாஜகவின் அலுவலக பொறுப்பாளராக இருக்கும் நிலையில், அவரது மனைவி சுவாதி சிங் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில் அமைச்சராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0