பெங்களூர் கலவரத்தில் காங்கிரஸ் தொடர்புகள் அம்பலம்..! எஸ்.டி.பி.ஐ கட்சியை அடுத்து சிக்கிய காங்கிரஸ்..!

13 August 2020, 3:05 pm
Bengaluru_Burns_UpdateNews360
Quick Share

செவ்வாய்க்கிழமை இரவு நடந்த கொடிய வன்முறையின் பின்னணியில் உள்ள சதிகாரர்களில் ஒருவராக, பெங்களூரு காவல்துறை தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரில் காங்கிரஸ் கவுன்சிலர் இர்ஷத் பேகமின் கணவர் கலீம் பாஷா 7’வது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு மாநகராட்சியின் நக்வாரா வார்டின் கவுன்சிலர் பேகமின் கணவர் பாஷா தான் தாக்குதலுக்கு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரைக் கைது செய்ய போலீசார் சென்ற போது அவர் தனது வீட்டிலிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளார்.

பாஷா முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கே.ஜே. ஜார்ஜின் நெருங்கிய உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கலீம் பாஷா மீது முன்னதாக, 2014’ம் ஆண்டு தனது வீட்டருகே மசூதி கட்ட எதிர்ப்புத் தெரிவித்த யூசுப் என்னும் இளைஞரை கொன்ற வழக்கிலும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், கர்நாடக ராஷ்டிர சமிதி (கே.ஆர்.எஸ்), ஜார்ஜ் மீது பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தில் வழக்கு பதிவு செய்திருந்தது. அவருக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பதாகக் அதில் குற்றம் சாட்டியிருந்தது.

தற்போது நடந்த பெங்களூரு கலவர வழக்கின் எஃப்.ஐ.ஆரில், ஐந்து பேர் 200 முதல் 300 பேர் கொண்ட குழுவை வழிநடத்தியதாகவும், காவல்துறையினரை தாக்குமாறு கூறி, பெட்ரோல் குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் பெங்களூரு நகர தெருக்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வன்முறை தொடர்பாக நேற்று இரண்டு எஸ்.டி.பி.ஐ தலைவர்களை போலீசார் கைது செய்தனர். எனினும், எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயலாளர் வசீம் அகமது, தனது கட்சி உறுப்பினர்கள் கும்பலைத் தூண்டுவதில் ஈடுபடவில்லை என்றும், முழு சம்பவத்திலும் அவர்கள் பலிகடாவாக்கப்படுகிறார்கள் என்றும் கூறினார்.

இதற்கிடையில், வன்முறை தொடர்பாக தீ வைப்பு, கல் வீசுதல் மற்றும் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டி.எஸ்.பி உட்பட 60’க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ அகந்தா சீனிவாசமூர்த்தியின் வசிப்பிடமும் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து தாக்கப்பட்டது.

இப்போது நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், டி.ஜே.ஹல்லி மற்றும் கே.ஜி.ஹல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சி.ஆர்.பி.சி) பிரிவு 144’ஐ ஆகஸ்ட் 15 காலை 6 மணி வரை மாநில அரசு நீட்டித்தது.

சமூக ஊடகங்களில் அவதூறான தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நவீன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

வன்முறையைக் கண்டித்து, இது சட்டம் ஒழுங்கு இயந்திரங்களின் முழுமையான தோல்வி என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ், பெங்களூரில் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பார்வையிட ஒரு உண்மை கண்டறியும் குழுவையும் அமைத்துள்ளது.

Views: - 28

0

0