கொரோனா குறித்து மக்களிடையே பீதியை உண்டாக்கும் காங்கிரஸ்..! பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விளாசல்..!

11 May 2021, 12:41 pm
JP_Nadda_UpdateNews360
Quick Share

கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் மக்களை தவறாக வழிநடத்துகிறது என்றும் தவறான பீதியை உருவாக்குவதாகவும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இன்று குற்றம் சாட்டினார். 

மேலும் ராகுல் காந்தி உட்பட அதன் தலைவர்களின் நடத்தை இரட்டை வேடம் போடுவதாக உள்ளது எனக் கூறினார். கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாள்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது அரசாங்கத்தையும் காங்கிரஸ் செயற்குழு விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு, நட்டா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நான்கு பக்க கடிதம் எழுதி பதிலடி கொடுத்துள்ளார்.

நூற்றாண்டு காணாத தொற்றுநோய்களின் போது ஒரு முதலமைச்சர் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் தடுப்பூசி தயக்கத்தை மீக மோசமாக சித்தரிக்க முயற்சிப்பதாகவும் பாஜக தலைவர் குற்றம் சாட்டினார்.

மோடியின் கீழ், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் அறிவியலில் அசைக்க முடியாத நம்பிக்கை, புதுமைக்கான ஆதரவு, கொரோனா போர்வீரர்கள் மீதான நம்பிக்கை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி ஆகியவற்றால் இயக்கப்படுகிறது என அவர் கூறினார்.

இந்த சவாலான காலங்களில் காங்கிரஸின் நடத்தை குறித்து தான் வருத்தப்படுவதாகவும் ஆனால் ஆச்சரியப்படவில்லை என்றும் நட்டா கூறினார்.

முன்னதாக, மோடி தனது தவறுகளுக்கு பரிகாரம் செய்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூறியது குறிப்பிடத்தக்கது.

Views: - 115

0

0